விளம்பரங்கள் உள்நுழை உறுப்பினர் பதிவு

கல்வி செய்திகள் செய்திகள் விவரங்கள்

கல்வி செய்திகள் செய்திகள்

img
  • Date: 16 August 2025

கணினிப் படிப்பின் அடுத்த கட்டப் பாய்ச்சல்

புதியன விரும்பு 2.0 - 16


செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின் புதிய வருகை. எடுத்துக்காட்டாக, பயனர் கேட்கும் தகவல்களைத் தேடித்தரும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமேசானின் ‘அலெக்சா’, கூகுள் ‘அசிஸ்டென்ட்’, மைக்ரோசாஃப்ட் டின் ‘கார்டனா’ போன்ற பிரபலமான டிஜிட்டல் மென்பொருள்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவானவை.

முக்கியமாகப் பயனரின் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டு, எதிர்காலத்தில் அவரது ரசனை சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறனைப் பெற்றுள்ளன.

நவீன திறன்பேசிச் செயலிகளில், ஒளிப்பட வண்ணங்களைப் பின்னணியில் இருக்கும் மென்பொருள் தானாகத் திருத்தி மேம்படுத்துவது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும் போது டைப் செய்யத் தொடங்கியதுமே அந்தப் பதம் என்னவாக இருக்கும் எனப் பரிந்துரைப்பது போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உபயம். Elsa (English language Speech Assistant), Google Allo, Robin போன்ற செயலிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவையே.