அ. நல்ல கல்வி போதிக்கும் கல்வி நிலையங்கள் அமைத்தல், நிர்வகித்து நடத்துத்தல்.
ஆ. சங்கத்தின் சார்பாக பள்ளிகள்,கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நூல் நிலையம் அமைத்தல், கல்வி நிதி உதவி அளித்தல், உணவு, உடை மற்றும் தங்கும் விடுதிகள் அமைத்து அவர்கள் கல்வி பயிலுவதற்கு உதவி செய்தல்.
இ. சமூகத்தில் வாழும் நலிந்த மக்களுக்கு திருமண உதவி மற்றும் குடும்ப நல உதவிகள் செய்தல்.
ஈ. சங்கத்தின் சார்பில் சத்திரங்கள், விடுதிகள், திருமண மண்டபம், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், சவ ஊர்தி, போன்றவை ஏற்படுத்தவும், சமூகத்தில் உள்ள முதியோர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்கள் பயனடைவதற்கும், வசிப்பதற்கும், உணவு. ஆகியவைகளுக்கும் தேவையானவற்றை செய்தல். உடை
உ. பொருளாதாரத்தில் பின் தங்கியோர், நலிவடைந்தோர், உடல் ஊனமுற்றோர் ஆகியவர்களின் நன்மைக்காக மருத்துவமனை அமைத்து மருத்துவ சிகிச்சை செய்தல்.
ஊ. சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தல்.
எ. மேற்சொல்லிய நோக்கங்களுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்தல்,கட்டிடம் கட்டுதல், மனைகள் வாங்குதல், விற்பனை செய்தல்.
ஏ. சங்கத்தின் நிர்வாகத்திற்கும், நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் தேவைப்படும் நிதியை பொதுமக்களை அணுகி அவர்களிடமிருந்து அன்பளிப்பு, மான்யங்கள், தொகைகள் முதலானவை பெறுதல்,
ஐ. மற்றும் மேற்சொல்லிய நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் முடிவுகளை நிறைவேற்றுதல் ஆகியவை ஆகும்.
அலுவலக நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் 6 மணி வரை
7.சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகைகள் :-
சங்கத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தி மேற்கண்ட சங்க நோக்கங்களையும்
செயல்படுத்தி சமுதாயத்தின் வாழ்க்கை தாத்தினையும், உயர்த்தப்பாடுபடுதல் போன்றவை இச்சங்கத்தின் நோக்கங்களை
நிறைவேற்றும் வகைகள் ஆகும்.
8. வழக்கு தொடருதல் :-
சங்கத்தின் மீது யாராவது வழக்குத் தொடர்ந்தாலும், சங்கம் பிறர்மீது வழக்குத் தொடர்ந்தாலும் சங்கத்தின் சார்பாக
பிரதிநிதியாக செயலாளர் பொறுப்பேற்பர்.
9. சங்கத்தின் நடைமுறை குறிப்புகள், அலுவல்கள் கவனித்தல் :-
சங்கத்தின் நிர்வாகம் முழுவதும் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் அதன் பொறுப்பு முழுவதும் தலைவர்
செயலாளர் வசம் இருந்து வரும். இவர்கள் நிர்வாகக்குழுவின் முடிவிற்கு ஏற்ப கூட்டமைப்பின் கீழ் நிர்வாகத்தினை திறம்பட
நடத்திச் செல்வர். சங்கத்தின் அலுவல்கள் சம்மந்தமாக அறிவுரை வழங்கும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே உண்டு.
10. உறுப்பினர்களை சேர்த்தல் :-
சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே
சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து
தலைவர் அல்லது செயலாளர் வசம் கொடுத்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டியது. இதற்காக வேண்டி
உறுப்பினர்களின் வருட சந்தாவாக ரூ.100/- வசூலிக்கப்படும். தொடர்ந்து மூன்று மாதம் சந்தா செலுத்தாத உறுப்பினர்கள்
உறுப்பினர் பதவியினை தானே இழந்து விடுவதாக கருதப்படுவர். சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து தற்சமயம் நிறுவனத்தலைவரும், அவருக்குப்பின் நிர்வாகக்குழுவும் எடுக்கும் முடிவே இறுதியாகும். மேற்சொன்னவாறு சந்தா செலுத்தாத
உறுப்பினர்கள் உறுப்பினர் பதவியினை இழப்பது குறித்து இறுதி முடிவு பின்வரும் செயற்குழு தீர்மானிக்கும்.
11. உறுப்பினர்களின் உரிமை, கடமை மற்றும் சலுகைகள் :-
உறுப்பினர்கள் சங்க நலன் கருதி சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஆக்கப்பணிகள்
ஈடுபாடும் ஒற்றுமையாகவும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள், சங்க அலுவலக வேலை நேரத்தில் சங்க அலுவலக
நடவடிக்கை மற்றும் கணக்குப் புத்தகங்களை பார்வையிடலாம். நிறுவனத்தலைவர் பொறுப்பு வகிக்கும் காலம் மேற்படி
சங்கத்திற்கு தேர்தல் மூலம் நிர்வாகஸ்தர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. நிர்வாகஸ்தர்களை நிறுவனத்தலைவரே कर्ण
சௌகரியம் ஆனால் போல் நியமித்துக்கொள்ள உரிமை உண்டு. அவரது காலத்திற்கு பின் அப்போதுள்ள சூழலைக் கருத்தில்
கொண்டு நிர்ணயித்துக்கொள்ள வேண்டியது. தேர்தல் சம்மந்தமாக விதிகளை
12. சங்கத்தின் அலுவல்கள் கவனித்தல் :-
தலைவர் :- இவர் சங்கத்தின் எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தி கொடுப்பார். செயலாளர் உதவியுடன்
சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை அவ்வப்போது கவனித்து வருவார். கூட்டத்தில் பிரச்சினைக்குரிய பொருளில்
தி்ப்புக்காண இயலாத தருணத்தில் By Casting Vote மூலம் தனது கருத்தினை உறுப்பினர் சார்பிலும் தெரிவித்து
முடிவுக்கு கொண்டு வரலாம், அவ்வப்போது உறுப்பினர்களின் குறைகளை கேட்டறிவர்.
துணைத்தலைவர் :-
இவர் தலைவருக்கு உதவியாக இருந்து செயல்படுவார். இவர் தலைவர் இல்லாதபோது அந்த பொறுப்பினை ஏற்று செயல்படுவார்.
செயலாளர் -
இவர் சங்கத்தின் நிர்வாகப்பொறுப்பு முழுவதும் ஏற்றுக்கொண்டு தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சங்கத்தினை திறம்பட நடத்தி செல்வார். உறுப்பினர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் கூட்டம் பற்றிய அறிவிப்புகளையும் சங்கத்தின் நிகழ்ச்சிக்குறிப்புகள், நடவடிக்கை குறிப்புகள், வருடாந்திர அறிக்கைகள் ஆகிய சகலவிதமான நடவடிக்கைகளையும் தயாரித்து அவ்வப்போது சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பி வைப்பார். பொருளாளருக்கு உதவியாக இருந்து சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை தயாரித்து தர உதவியாக இருந்து வருவார்.
துணைச்செயலாளர் :-
இவர் செயலாளருக்கு உதவியாக இருந்து செயல்படுவார். இவர் செயலாளர் இல்லாதபோது அந்த பொறுப்பினை ஏற்று செயல்படுவார்.
பொருளாளர் :-
இவர் சங்கத்தின் நிதிக்காவலர், சங்கத்தின் உறுப்பினர்களிடம் சந்தா வசூலித்தல், பொது மக்களிடம் நன்கொடைகள் வசூலித்தல்,
வசூலித்த தொகைக்கு அவ்வப்போது ரசீது வழங்கி வருவார் மற்றும் சங்கத்தின் மாதாந்திர வருடாந்திர வரவு செலவுக் கணக்குகள்
செயலாளர் உதவியுடன் தயாரித்து தணிக்கைக்கு தயார் நிலையில் வைப்பார். வரவு வவுச்சர்கள் செயலாளர் கையொப்பத்துடன்
அனுமதிப்பார்.
13. நிர்வாகக்குழு :-
நிர்வாகக்குழு என்பது நிறுவனத்தலைவரால் நியமித்துக்கொள்ளப்படும்.
நிர்வாகக்குழு என்பது (1) தலைவர் (2).ஒரு துணைத்தலைவர் (3).ஒரு செயலாளர் (4).ஒரு துணைச்செயலாளர், (5) ஒரு (1) சட்ட ஆலோசகர் ( ஒரு (1) பொருளாளர், (7) ஐந்து (5) செயற்குழு உறுப்பினர்களாகவும்,
ஆகியவர்களைக் கொண்டு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்
14. நிர்வாகக்குழு கூட்டம் :-
நிர்வாகக்குழு கூட்டம் மாதம் ஒரு முறைக் கூட்டப்படும். தலைவர் விரும்பினால் சூழ்நிலைக்கேற்ப மீண்டும் தேவைக்கேற்ப கூட்டத்தினைக் கூட்டலாம்.
15. சங்க நிதியாண்டு :
சங்கத்தின் நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் மாதம் முடிய உள்ள காலம் ஆகும்.
16. வருடாந்திர பொதுக்குக் கூட்டம் :
சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் வருடம் ஒரு முறை கூட்டப்படும்.
இப்பொதுக்குழுக் கூட்டம் 21 நாள் முன் அறிவிப்புச் செய்து கூட்டப்படும் (கூட்ட நாள் மற்றும் அறிவிப்புகள் நீங்கலாக)
மேற்படி அறிவிப்பு மூலமாகவோ அறிவிப்பு செய்ய வேண்டும்.
17. மேற்படி பொதுக்குழுக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் விஷயம்
நிர்வாகக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைக் குறிப்புகள் மற்றும் சங்கத்தின் வருடாந்திர வரவு -
செலவு கணக்கு அறிக்கைகளை தணிக்கைச் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையை பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு
உறுப்பினர்களிடம் பார்வைக்கு வைக்கப்படும். பொதுக்குழுவினால் அங்கீகரித்தல் மற்றும் பொதுச் செயலாளரால் கொண்டு
வரப்படும் இதர அறிக்கைகள் தலைவரின் அனுமதியின் பேரில் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் அங்கீகாரம் பெறுதல்
தணிக்கையாளர் நியமனம் செய்தல் போன்றவை ஆகும். அசாதாரண பொதுக்குழு கூட்டம் அவசரமாகவும், உடனடியாகவும்
கூட்டப்பட வேண்டும் எனக் கருதி 1/3 பங்கு உறுப்பினர்களின் எழுத்து மூலம் கோரிக்கை கொடுத்தால் தலைவர் பொதுக்
குழுவை 21 நாள் முன்னறிவிப்பு செய்து 30 நாட்களுக்குள் தலைவர் கூட்டுவார்.
18. விலக்குதல் :-
நிர்வாகக்குழு உறுப்பினர்களில் எவரேனும் தொடர்ந்து நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 2 முறை வராமல் இருந்தாலும்,
சங்கத்தின் நோக்கங்களுக்கும், சங்கத்தின் விதிமுறைகளுக்கும், நலத்திற்கும் முறனாக செயல்படும் எந்தவொரு நிர்வாகக்குழு,
பொதுக்குழு அல்லது தனிப்பட்ட உறுப்பினர்களையும் நீக்க நிறுவனத்தலைவருக்கு உரிமை உண்டு.
19. நிர்வாகக்குழுவினரின் உரிமைகள் :-
நிர்வாகம் முழுவதும் நிர்வாகக்குழுவின் தீர்மானப்படியே நிர்வாகக் குழுவிற்கு பொதுவான அனைத்து இறுதியாக்கப்படும். அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், சட்ட திட்டத்திற்குட்பட்டும் அனுமதிக்கப்படுகிறது. சங்கத்தின் நிதிகளையும் பொருட்களையும் நோக்கங்களுக்காக சங்கத்தின் சார்பாக வாங்கவும், சங்கத்தின் செயல்படவும் நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. சங்கத்தின் பெயரால் இருக்கக்கூடிய அசையும், அசையாச் சொத்துகளுக்கு நிர்வாகக்குழு முழுப்பொறுப்பேற்கிறது.
20 சங்கத்தின் நிதி :-
சங்கத்தின் நலன் கருதியும், சங்கத்தின் வளர்ச்சி கருதியும் சங்கத்தி நிதிகளை பெருக்க வேண்டிய சங்க நிர்வாகக்குழு தீர்மானப்படி பொது மக்களிடம் நிதி திரட்டியும் மற்றும் உறுப்பினர்களிடம் சந்தா வசூல், நுழைவுக்கட்டணம் வசூல் போன்ற தொகையினை அவ்வப்போது சங்கத்தின் பெயரால் துவங்கப்பட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். இந்த கணக்கு தலைவர், பொருளாளர் கூட்டுப் பொறுப்பில் இருந்து வரும்.
சங்கத்தின் வருமானம் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் முழுமையாக சங்க அமைப்பு குறிப்பில் கண்டபடி சங்கத்தின் நோக்கங்களுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே உரியது, செலவிடப்படும். மாறாக சங்கத்தின் அத்தகைய வருமானம் மற்றும் அசையும் /அசையா சொத்துக்கள் சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களிடையே லாய் பங்காகவோ பிரித்துக் கொடுக்கப்படமாட்டாது. தனிப்பட்ட முறையில் சொத்துரிமை கோரமுடியாது. ஈவுத்தொகையாகவோ, மேற்படி உறுப்பினர்கள்
21. குறைந்தபட்ச வருகை :-
கோரம் என்பது பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் உறுப்பினர்களில் 3/4 பங்கு நபர்கள் ஆஜராக வேண்டும். குறைந்தபட்சம் உறுப்பினர்கள் இல்லையெனில் கூட்டம் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படும். இவ்விதம் ஒத்தி வைக்கப்பட கூட்டத்திற்கு கோரம் (quorum) அவசியம் தேவை. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு மொத்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு வந்திருக்கும் உறுப்பினர்களின் உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.
22. சுற்றறிக்கை மற்றும் சிறப்புத் தீர்மானங்கள் :-
சங்கத்தின் சிறப்புத் தீர்மானம் என்பது சங்கத்தின் புதிய விதிகள் திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் சங்கத்தைக் கலைத்தல் போன்றவற்றிற்கு சிறப்பு தீர்மானங்கள் அவசியம்.
23. தணிக்கை அறிக்கை
இச்சங்கத்தின் கணக்குகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31-ம் தேதி முடிவு பெற்றவுடன் தணிக்கை செய்யப்படல் வேண்டும். இச்சங்கத்தின் வருட வரவு செலவுகள் ரூ.2500/-க்கு குறைவாக இருப்பின் இச்சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்லாத இரு சங்க உறுப்பினர்களில் I.T.P. வரை படித்து முடித்துள்ள நபர்களால் தணிக்கை செய்யப்படல் வேண்டும். ரூ.2500/-க்கு அதிகமாகவும், ரூ.10,000/-க்கு குறைவாகவும் இருந்தால் இரு பட்டதாரிகளால் தணிக்கை செய்யப்படல் வேண்டும். ரூ.10,000/-க்கு அதிகமாக இருந்தால் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்த தணிக்கையாளர் அவர்களால் தணிக்கை செய்யப்படல் வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாளை ஒவ்வொரு வருடமும் பொதுக்குழுவின் அங்கீகாரத்தினை பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஐந்தொகை அறிக்கையினை சங்கங்கள் பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்தல் வேண்டும்.
24. சங்கத்திற்கெள கீழ்காணும் பதிவேடுகள் பேணப்பட வேண்டும் சங்கத்தின் உறுப்பினர்கள் பட்டியல், ரசீது புத்தகம், பணக் குறிப்பேடு சங்கத்தின் நடவடிக்கை குறிப்பேடு, நிகழ்ச்சிக் குறிப்பு பதிவேடு, செலுத்தச்சீட்டு கோப்பு மாதாந்திர வரவு செலவு கணக்குப்பதிவேடு ஆகியவையாகும்.
25 கையிருப்புத் தொகை
சங்கத்தின் அவசரச் செலவினை கருதி பொருளாளர் தன் கையிருப்பில் 6.5,000/- வரை வைத்திருக்கலாம். பாக்கியிருப்புத் தொகைகளை அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் சங்கத்தின் சேமிப்புக் கணக்கில் சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் கூட்டுக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். மாவட்டத்தைப்பொருத்தவரை செயலாளர் கூட்டுக்கணக்கில் சேர்த்து பராமரிக்க வேண்டும். மற்றும் பொருளாளர்
26. சிறப்புத் தீர்மானம், நகல்கள் அனுப்புதல் மற்றும் படிவம் 7 தாக்கல் உறுப்பினர்களிடையே ஏற்படும் மாற்றத்தினை 3 மாதங்களுக்குள் படிவம் -7 மூலமும், சிறப்புத் தீர்மான நகல்கள் 3 மாதங்களுக்குள் மாவட்டப்பதிவாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஆண்டுப் பொதுக் குழுக்கூட்டம் முடிந்த 6 மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை மாவட்டப்பதிவாளர் அவர்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
27. "தமிழக தலைமை அகமுடையார் சங்கம் " என்கிற சங்கத்தின் பொருப்பாளர்களையும், நிர்வாகிகளையும் உரிய நிபந்தனையுடன் நியமிக்கவும் தேவைப்பட்டால் விலக்கவும் தலைவருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. அவ்வாறு அனுமதி பெறாமல் செயல்படும் நிர்வாகிகள் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் யாவும் "தமிழக தலைமை அகமுடையார் சங்கம் தென்சென்னை" என்கிற சங்கத்தினை கட்டுப்படுத்தாது. சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் கையொப்பமிட்ட அடையாள அட்டை வழங்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் அடையாள அட்டைக்குரிய தொகை செலுத்தி பெற்றுக்கொள்வது மிக அவசியம். அடையாள அட்டை இல்லாத உறுப்பினர்கள் சங்கத்தில் எவ்வித பலனும் கோர இயலாது.
28. சங்கக் கலைப்பு :-
சங்கம் கலைக்கப்படுமானால் சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 41 மற்றும் 42-ன்படி சங்கத்தின் சொத்து குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
29. இதர இனம் :-
அதில் காணாத இதர இனம் குறித்து தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டம் 1975ன் கீழ் நிறைவேற்றப்படும்.
இச்சங்கத்தின் துணை விதிகளில் ஆங்காங்கே கூறப்பட்டிருக்கும் சங்கம் என்கிற சொல்லானது "தமிழக தலைமை அகமுடையார். சங்கம் " என்கிற சங்கத்தினை குறிப்பதாகும்.
30. ஆண்டு பொதுக்கூட்டத்தின் நாள் : ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-
க்குள்