கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் - அமைச்சர் தகவல்
பிஎட் மாணவர் சேர்க்கையில் இணையவழியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎட் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்தஆண்டு முதல்முறையாக இணையவழி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் உள்ள 2,040 இடங்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது.